தாய்வானுக்கு அமெரிக்கா பாரிய இராணுவ உதவி: அதிகரிக்கும் பதற்ற சூழ்நிலை
தாய்வானுக்கு அமெரிக்கா சுமார் 345 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவியினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக தாய்வானை கைப்பற்றுவோம் என்று சீனா அறிவித்துள்ள நிலையிலே. அமெரிக்கா இந்த இராணுவ உதவிகளை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இராணுவ உதவியில் உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு கருவிகள் மற்றும் சிறிய ஆயுத வெடிமருந்துகள் என்பன அடங்குவதாகவும், குறித்த உதவியை விரைவில் வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக, எதிர்காலத்தில் தன் நாட்டிற்கெதிராக நிகழ்த்தப்படும் இராணுவ நடவடிக்கைகளைத் தாய்வான் தடுக்க முடியும் என அமெரிக்க இராணுவ அமைச்சகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் சொந்த இருப்பு
ரஷ்யாவிற்கெதிரான, உக்ரைனின் போராட்டத்தின் போது அமெரிக்கா உக்ரைனிற்கு அவசரகால உதவியாக இராணுவ தளபாடங்களை இராணுவ அமைச்சகம் வழங்கியது போலவே இப்போது தாய்வானிற்கும் உதவுகின்றது.
அமெரிக்க அதிபரின் ட்ரோடௌன் ஒதோறிர்ரி (drawdown authority) என்ற உத்தரவின் வாயிலாகவே அமெரிக்கா இந்த உதவியினை வழங்குகிறது.
இந்த தளபாடங்கள் அனைத்தும் அமெரிக்காவின் சொந்த இருப்புகளிலிருந்து வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாடுகளிற்கு இடையே பதற்றமான சூழல்
கிழக்காசியாவிலுள்ள நாடுகளில் ஜனநாயக நாடாக விளங்குகின்ற தாய்வானை, தனது தேசத்தின் ஒரு பகுதியாக சீனா அறிவித்துள்ளது.
ஆனால் தாய்வான் இந்த முடிவிற்கு தனது எதிர்ப்புக்களையே வழங்கி வருகிறது. இந்த நிலையில் தேவையேற்படின் இராணுவ ஆக்கிரமிப்பு மூலமாக கூட தாய்வானை கைப்பற்றுவோம் என்று சீனா கூறுகின்றது.
கடந்த ஆண்டு (2022), சீன இராணுவம் தாய்வானை சுற்றியுள்ள பகுதிகளில் 2 பெரிய இராணுவ பயிற்சிகளை நடத்தியதன் போதே தாய்வான் தீவின் முற்றுகையும் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு நாடுகளிற்கு இடையேயும் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
you may like this
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
