செட்டிக்குளம் - தம்பனைகுளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு(Photos)
செட்டிக்குளம் - கலாசியம்பலாவ தம்பனைக்குளத்தில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக செட்டிக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (26.12) மாலை குளத்திற்குச் சென்றவர்கள் குளத்தில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்து பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வீட்டிலிருந்து நேற்றைய தினம் நண்பர்களுடன் சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. குறித்த இளைஞரை அவரது வீட்டார் தேடி வந்த நிலையிலேயே குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவர் தம்பனைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஹரிந்து கோசல்யுஸ் வெத்தியாராச்சி (வயது 24) என்பவராவார்.
இளைஞரின் மரணம் தொடர்பில் உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ள நிலையில், செட்டிக்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
ஈரான் போரில் அமெரிக்காவின் உண்மை நிலை... கசியவிட்ட அதிகாரிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை News Lankasri
லட்சுமி பிரியா முதல் பிளாக் பாண்டி வரை.. பிக் பாஸ் 10ல் நுழைந்த போட்டியாளர்கள் முழு லிஸ்ட் Cineulagam