செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குழப்பநிலை: எடுக்கப்பட்ட தீர்மானம்
செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துக்கொள்ள வந்த அபிவிருத்தி குழு தலைவரும், கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவினை செட்டிகுளம் பிரதேச சபையினர், ஆளும் கட்சி உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் நேற்று (14.10) இடம்பெற்றுள்ளது.
இதன்போது செட்டிகுளம் பிரதேச சபையின் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச சபை தலைவர் உட்பட அவர் கட்சி சாராத இருவரை கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், வட்டார உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற ரீதியில் அனைத்து சபை உறுப்பினர்களையும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து செட்டிகுளம் பிரதேச ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து பிரதேச செயலக வாயிலில் கூடியிருந்தனர்.
இதன்போது வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், முத்து முகமது ஆகியோரை அனுமதித்த பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களோடு பிரதேசசபை வளாகத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடியுள்ளனர்.
பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை
இதன் பின்னர் அங்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் வாகனத்தினை பிரதேச செயலகத்திற்குள் நுழைய விடாது சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன் போது தங்களையும் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர், இது அரசியல் செயற்பாடு அல்ல. நாடாளுமன்றத்தினால் கொண்டு வரப்பட்ட ஒரு நடைமுறை. இந்த விடயம் நாடாளுமன்றத்தின் ஊடாகவே செயல்படுத்தப்பட வேண்டும். ஆகவே இங்கே உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கதைத்து இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
பிரதேச சபை உறுப்பினர்கள் மீண்டும் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதன்போது கூட்ட ஆரம்பத்தில் தலைமை உரையாற்றிய பிரதி அமைச்சர் அபிவிருத்தி குழு தலைவர் உபாலி சமரசிங்க,
நாடாளுமன்றத்தில் இவ்வாறான ஒரு நடைமுறை கொண்டு வரப்பட்டு சட்டமாக்கப்பட்டு இருந்த போதிலும் கூட எமது பிரதேசத்தின் செயல்பாடு கருதி நாம் இந்த கூட்டத்தில் அனைவரையும் அனுமதித்து சுமூகமான முறையில் கூட்டத்தைக் கொண்டு செல்வோம். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் ஒரு முடிவு எடுப்போம் எனவும் தெரிவித்து கூட்டத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.
குறித்த சம்பவம் இடம்பெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், முத்து முகமது பிரதேச சபையின் தலைவர் தாஜுதீன் முகமது இந்தியாஸ் ஆகியோரும் பிரதேச சபை உறுப்பினர்களும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam

காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு.. போட்டோ பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்! ஆனால் உண்மை இதுதான் Cineulagam
