யாழ். சென்னை விமான சேவையில் தடங்கல்: வானில் 30 நிமிடங்கள் பறந்த விமானம்
சென்னையில் இருந்து யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைய இருந்த விமானம் மீண்டும் சென்னை திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் நிலவும் மழையுடன் கூடிய சீரற்ற வானிலை காரணமாக இன்று (19.12.2023) விமானம் மீண்டும் சென்னைக்கு திரும்பி சென்றுள்ளது.
குறித்த தகவலை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சீரற்ற வானிலை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (19) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானமே, யாழில் தரையிறங்காது மீள சென்னைக்கு திரும்பியுள்ளது.

குறித்த விமானம் இன்று 11.40 ற்கு தரையிறக்க வேண்டிய நிலையில் சீரற்ற வானிலை காரணமாக வானில் 30 நிமிடங்களுக்கு மேலாக பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் சென்னைக்கு திரும்பி சென்றதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You may like this
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
தவெக பல தொகுதிகளில் முன்னிலை வகித்தாலும்..! 10 தொகுதிகளின் நிலவரம் - இறுதி முடிவுகளில் மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு
அதிரவைக்கும் வாக்கு எண்ணிக்கை..! முன்னிலை வகிக்கும் தவெக - வேட்பாளர்களை பாதுகாக்க விஜய் அவசர ஏற்பாடுகள்