செம்மணி தமிழின படுகொலைகளும் சிங்களவர்களின் மனநிலையும்
இலங்கையில் தமிழின படுகொலையின் மற்றுமொரு சாட்சியமான செம்மணி மனித புதைகுழி இன்று மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழர்களை வலிந்து அழிக்கும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டதுடன், அவ்வாறான ஒரு துன்பியல் சம்பவங்களே நடைபெறவில்லை என இன்று வரை வாதிட்டு வருகிறது.
இனப்படுகொலைகளை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று செம்மணி மனித புதைகுழியில் இருந்து வெளிவரும் மனித எச்சங்கள் அரசிற்கு பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.
அண்மையில் கனடாவின் பிரம்டன் நகரில் இலங்கை இராணுவத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நினைவு கூரும் வகையில் நினைவு தூபி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
நினைவு தூபி
கனடா அரசின் முழுமையான ஆதரவுடன் இந்த நினைவு தூபி அமைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கம் கடும் கண்டனம் வெளியிட்டிருந்தது.
இலங்கையில் எந்தவொரு இனவழிப்பும் நடைபெறவில்லை. இனவழிப்பு என்ற சொற்பதம் பயன்படுத்த தடை விதிக்கப்படும் என சமகால அநுர அரசாங்கம் அறிவித்திருந்தது.
குறித்த நினைவு தூபி தொடர்பில் இலங்கையின் கடும்போக்குவாத சிங்கள ஊடகங்கள் கடுமையாக சாடியிருந்தன. அதனை உடைத்து அழிக்க வேண்டும் என கோஷமிட்டன.
தென்னிலங்கையில் சிங்கவர்கள் பலர் கொந்தளித்திருந்தனர். தமது உச்சகட்ட இன வன்மத்தை சமூக ஊடங்களில் வெளிப்படுத்தியிருந்தனர்.
இன்று செம்மணி மனித புதைகுழி சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. அந்தப் பகுதிக்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோக்கர் டரக்ர் விஜயம் செய்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
செம்மணி புதைகுழி
இதன்மூலம் சர்வதேச ரீதியாக செம்மணி புதைகுழி கவனம் பெற்றுள்ளது. எனினும் சிங்கள ஊடங்கள் மௌனம் சாதிக்கின்றன. அது தொடர்பான எந்தவொரு தகவல்களையும் வெளியிடாமல் தவிர்த்து வருகின்றன.
பெரும்பான்மையான சிங்களவர்கள் கடுமையான மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை மீட்கப்பட்டுள்ள 33 மனித எலும்புக்கூடுகளும் விடுதலைப் புலிகளினது என்று சாடுகின்றனர்.
புத்தக பையுடன் பாடசாலை செல்லும் பிள்ளை கூட அவர்களின் பார்வையில் பயங்கரவாதிகளாக எண்ணத் தோன்றுகின்றது. எனினும் ஆங்காங்கே ஒரு சில சிங்கள இளைஞர்கள் செம்மணி மனித புதைகுழி குறித்து கவலை வெளியிட்டுள்ளனர். அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை விடுத்து வருகின்றனர்.
மறுபுறம் காசாவில் கொல்லப்படும் அப்பாவி மக்களுக்காக இலங்கையில் இரத்த கண்ணீர் வடிக்கும் சமூக ஊடக போராளிகள், செம்மணி புதைகுழி தொடர்பில் எந்தவொரு தகவல்களை வெளியிடவில்லை.
காத்திரமான விசாரணை
காலங்கள் எவ்வளவு மாறினாலும், இன ரீதியான வன்மம் மட்டும் அவர்களிடம் மாறவில்லை என்பதற்கு இதுவோரு சிறந்த உதாரணமாகும்.
இவ்வாறான நிலையில் செம்மணி மனித புதைகுழி தொடர்பில் காத்திரமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என சமகால அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
எனினும் அது எவ்வளவு சாத்தியம் என்பது கண்கூடு. இலங்கையில் இனவழிப்பு ஒன்று நடைபெறவில்லை என்ற கோட்பாட்டை கொண்ட அரசாங்கம் அது தொடர்பில் நியானமான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்பது சந்தேகமே.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Vethu அவரால் எழுதப்பட்டு, 02 July, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
