செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழி அகழ்வு பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
யாழ். செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் தற்காலிகமாக இன்றுடன் (10) நிறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த அகழ்வு பணிகள் மீண்டும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
தற்காலிகமாக நிறுத்தம்
24 நாட்கள் நடைபெற்ற முதலாம் மற்றும் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் ஒன்றில் 63 மனித எலும்புக்கூடுகளும், தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இரண்டில் 2 மனித எலும்புக்கூடுகளுமாக மொத்தமாக 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அகழ்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜாவின் முன்னிலையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ்சோமதேவா, சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்போடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
