நீதிபதி இளஞ்செழியனின் 1998 - முடிவுகளால் 2026இல் மீண்டும் அதிரும் செம்மணி
செம்மணி - சித்துபாத்தி பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் தீவிர அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை நூற்றுக்கணக்கான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் உள்ளிட்ட பல உயர்மட்டப் பிரதிநிதிகள் குழுவினர், செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இடம்பெற்று வரும் ஆய்வு நடவடிக்கைகளை பார்வையிட சென்றிருந்தனர்.
அதேநேரம், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பிரதிநிதிகளையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனுவையும் பெற்றுக்கொண்டனர்.
ஈழத்தமிழ் மக்கள், தாங்கள் நீண்டகாலமாக சுமந்து வரும் இந்த அவலத்திற்கு சர்வதேச நீதி கோரி நிற்கின்றனர். இவ்வாறிருக்கையில் இந்த உயர்மட்ட அதிகாரிகளின் வருகை நீதிக்கு வழிவகுக்குமா என்ற கேள்வியை இங்கு எழுப்புகின்றது.
இது உள்ளிட்ட பல முக்கிய தகவல்களை ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,