செம்மணி தடயப்பொருட்களை பார்வையிட மக்களுக்கு அழைப்பு.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு!
யாழ். சித்துப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து மீட்கப்பட்ட தடயப்பொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள யாழ். நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செம்மணி பகுதியில் உள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின் பொழுது மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளுடன் சான்றுபொருட்களும் கண்டெடுக்கப்பட்டன.
குறித்த சான்றுபொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு பெற்றுக்கொள்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.
மக்களிடம் கோரிக்கை
அதன் பிரகாரம், சான்றுபொருட்களை பொதுமக்களுக்கு காண்பித்து விசாரணை நடவடிக்கைகளை மேற்கொள்ள நீதிமன்றமானது அனுமதியை வழங்கியுள்ளது.
அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025.08.05ஆம் திகதி 13:30 மணிமுதல் 17:00 மணிவரை, மேற்படி உடைகள் மற்றும் பிறபொருட்கள் (Artifacts) காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அவற்றைப் பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 11 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
