விரைவில் கொழும்பில் ஒன்றுகூடவுள்ள முக்கிய புள்ளிகள்!
ஐக்கிய தேசியக் கட்சியின் 79ஆவது ஆண்டு நிறைவு விழாவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பல அரசியல் கட்சிகளின் தலைவர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த விழா, எதிர்வரும் 6ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் நடைபெறவுள்ளதாக வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
தீர்மானங்கள்
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்காக அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அழைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அரசியலமைப்பு சர்வாதிகாரத்தை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் அண்மைய நாட்களில் அரசாங்கத்திற்கு எதிராக அணி திரண்ட அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளதாகவும் வஜிர அபேவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலைமை, நாடு எதிர்நோக்கும் சவால்கள், ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தற்போதைய பொறுப்பு மற்றும் எதிர்காலப் பாதை தொடர்பில் ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்க விசேட அறிக்கையொன்றை நாட்டுக்கு வழங்கவுள்ளதாகவும் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.





15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri

படம் இல்லை ரூ. 100 கோடிக்கு மேலான செலவில் அட்லீ இயக்கும் விளம்பரம்... பிரம்மாண்டத்தின் உச்சம் Cineulagam

ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
