செம்மணிப் புதைகுழி விவகாரம்: தொற்றுநோய் காரணமல்ல..! நீதிமன்றில் ஆதாரங்களை சமர்ப்பிக்க கோரிக்கை
செம்மணிப் புதைகுழியின் பின்னணியில் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருக்கலாம் எனக் கருதுவதற்குப் போதிய சான்றுகள் இல்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், சட்டத்தரணிகள் குழாமொன்றின் ஊடாக தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்திலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டபட்டுள்ளது.
தொற்றுநோய் பாதிப்பு நிராகரிப்பு
அதில், மேலும் தெரிவிக்கப்படுவதாவது, செம்மணிப் புதைகுழிக்கு தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக இருந்திருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ்சோமதேவ தனது இடைக்கால அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அடையாளம் காணக்கூடியதும் சரிபார்க்கக் கூடியதுமான அறிவியல் சான்றுகள் ஆதரிக்காத வரை பேராசிரியர் ராஜ் சோமதேவவின் கருத்தை பாதிக்கப்பட்ட தரப்பினர் மறுக்கின்றனர்.
இத்தகைய கருதுகோளுக்கு ஆதரவாகப் பயன்படுத்தப்படும் உண்மைநிலை மற்றும் அறிவியல் அடிப்படைகளை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெளிவுபடுத்த வேண்டும்.
போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில், செம்மணிப் புதைகுழிக்கான காரணமாக தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவைக் கருத முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
YOU MAY LIKE THIS