செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 101 மனித எலும்பு கூடுகள் அடையாளம்
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து இன்றைய தினம் சனிக்கிழமை 11 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி பகுதியில் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 01" மற்றும் "தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல - 02" என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அகழ்வு பணிகள்
இரண்டாம் கட்ட பணிகளுக்காக 45 நாட்கள் நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரண்டாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம் 21 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது. இதன்போது இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் 09 எலும்பு கூட்டு தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளன.
அதேவேளை செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் இதுவரையில் கட்டம் கட்டமாக 30 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் போது, இன்றைய தினத்துடன் 90 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும், இதுவரை 101 மனித எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அத்தோடு நாளையதினமும் அகழ்வுப்பணி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளன.














யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri