தமிழின அழிப்புக்கு நீதி கோரிய அணையா விளக்கு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

United Nations Missing Persons Gajendrakumar Ponnambalam
By Theepan Jun 24, 2025 01:40 PM GMT
Report

சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தும் அணையாவிளக்கு போராட்டத்திற்கு அனைவரும் அணிதிரளுமாறு  தமிழ்த் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

குறித்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (24) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்ததென்பதனை கண்டறிவதற்காக சர்வதேச நீதிப்பொறிமுறையை வலியுறுத்திவரும் நிலையில் தற்போது செம்மணியில் மேலுமொரு மனிதப் புதைகுழி கண்டறியப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்

முல்லைத்தீவில் மாணவனை தாக்கிய பாடசாலை அதிபர்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

யுத்தத்தின் போதும், அதற்குப் பின்னரும் சிறிலங்கா ஆயுதப்படைகளாலும் துணை இராணுவக் குழுக்காளாலும் கைது செய்யப்பட்டும் மற்றும் அவர்களிடம் கையளிக்கப்பட்ட பின்னர் அல்லது அவர்களிடம் சரணடைந்த பின்னர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறும் மற்றும் இலங்கை அரச படைகளால் நடத்தப்படும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோரது பெயர் பட்டியல்களை வெளியிடுமாறும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது அமைப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்துள்ளபோதும் இக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

காணாமல் போனோரின் அலுவலக உருவாக்கமானது சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கான சிறிலங்கா அரசின் கண்துடைப்பு நடவடிக்கையே என்பதனை அந்த அமைப்பின் செயற்பாடுகள் நிரூபித்துள்ளது.இவ் அலுவலகமானது உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளது நடைமுறைத் தேடலைத் தாமதப்படுத்துகின்றது.

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய அணையா விளக்கு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Chemmani Human Grave Tamil National Council Report

நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தாமதத்தின் விளைவாக குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையால், வலிந்து காணாமல் ஆக்குவதற்கான தலைமையை வழங்கியவர்களும் அதற்கான சித்தாந்த ரீதியான ஆதரவை வழங்கியோரும் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தில் அமரக்கூடியதாகவும் சுதந்திரமாக நடமாடக்கூடியதாகவுமுள்ளது.

சிறிலங்காவின் நீதித்துறையும் பொலிஸ் துறையும் இனவாதமும் மதவாதமும் நிறைந்ததாகவும், அரசியல் மயப்பட்டதாகவும் நம்பகத்தன்மையிழந்தும் காணப்படுகின்றது.

அதேவேளை இக்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்காவின் ஆயுதப்படைத் தளபதிகள் மற்றும் உளவுப்பிரிவின் அதிகாரிகளுக்கு பதவிஉயர்வுகளும், வெகுமதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.

அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டில் (ICPPED) குறிப்பிடப்பட்ட - தெரிந்துகொள்ளும் உரிமை, நீதிக்கான உரிமை, இழப்பீடு பெறுவதற்கான உரிமை, குற்றங்கள் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான உத்தரவாதம் போன்றவை தமிழர்களுக்கு வெற்று வார்த்தைகளாகவே இன்றும் உள்ளன.

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழரசு கட்சி

திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபையை கைப்பற்றிய தமிழரசு கட்சி

சர்வதேச குற்றவியல் விசாரணை

உண்மை, நீதி, மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக நீண்ட கால தேடலுடனான போராட்டம் மிகவும் வேதனையானதாகும். தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதிகோரிப்போராடும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், சிறிலங்காவின் உளவுத்துறையினரால் கண்காணிக்கப்பட்டு, இராணுவத்தினராலும் அவர்களுக்குத் துணைபோகும் காவல்துறையினராலும் மிரட்டல் மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி நீதி கோரிய போராட்டத்துடன் இணைந்திருந்த சுமார் 80 க்கும் அதிகமானவர்கள், தங்கள் உறவுகளின் உண்மை நிலையை அறியாமலேயே மரணமடைந்துள்ளார்கள். 2015 ஆம் ஆண்டில் இலங்கை கையெழுத்திட்ட - அனைத்து நபர்களையும் பாதுகாப்பதற்கான சர்வதேச மாநாட்டின் 24 ஆவது பிரிவு, காணாமற்போன நபரை மட்டுமல்ல, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதன் விளைவாக பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களையும் பாதிக்கப்பட்டவர்களாக வரையறுக்கின்றது.

தமிழின அழிப்புக்கு நீதி கோரிய அணையா விளக்கு போராட்டம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Chemmani Human Grave Tamil National Council Report

போர் முடிவடைந்து 16 வருடங்களாகியும் சிறிலங்காவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாக - பொறுப்புக்கூறல் இல்லாமை மற்றும் தண்டனையின்மையால் பாதிக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கவில்லை.

இதனால், இந்த குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலுக்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் மூலமாகவோ அல்லது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினுடாகவோ விசாரிக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இலங்கைக்கு வருகைதந்துள்ள நிலையில் - தமிழ் மக்கள் மீதான இனவழிப்புக்கு சர்வதேச குற்றவியல் விசாரணையை வலியுறுத்தி அணையா விளக்கு என்னும் பெயரில் சர்வதேசத்திடம் நீதிகோரும் போராட்டம் ”மக்கள் செயல்“ என்னும் தன்னார்வ இளையோர் அமைப்பினால் யாழ் செம்மணி வளைவுப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழின அழிப்புக்கு பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணையை முன்னெடுக்கவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரத்தை பாரப்படுத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படும் இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றோம்.

குறிப்பாக நாளை 25.06.2025 காலையில் ‘மக்கள் செயல்’ அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள பேரணிக்கும் பேராதரவு வழங்கி கலந்து கொளுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை முதல்வர் தெரிவு

மன்னார் நகர சபை முதல்வர் தெரிவு

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
நன்றி நவிலல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

எழுதுமட்டுவாழ், விசுவமடு

16 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், வவுனியா, Paris, France

13 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 4ம் வட்டாரம்

12 Nov, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
20ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US