விவசாயிகளுக்கு இரசாயன உரத்தையும் எரிபொருளையும் வழங்குமாறு கோரி பேரணி (Photos)
விவசாயிகளுக்கு இரசாயன உரத்தை வழங்குமாறும் விவசாயத்திற்குத் தேவையான எரிபொருளை வழங்குமாறும் கோரி புத்தளம் மாவட்ட நீர்ப்பாசணத் திணைக்கள பொறியியளாலர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை முன்னெடுத்திருந்தனர்.
இப் பேரணியானது இன்று முன்னெடுக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இரசாயன உரத்தையும் எரிபொருளையும் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளை ஏந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீண்டும் பிரதான சுற்றுவட்டாரத்தினூடாக நீர்ப்பாசனத்திணைக்களத்தை சென்றடைந்தனர்.





