பெண் ஒருவரை ஏமாற்றி பண மோசடி: சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு
கிளிநொச்சி - திருமுறிகண்டி பகுதியில் பெண் ஒருவரை ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சியைச் சேர்ந்த பெண் மற்றுமொரு பெண்னொருவரிடம் அவரது வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் பெறுமதியான பொருட்களை அனுப்பியுள்ளதாக தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு குறித்த பணத்தொகையினை வங்கியில் வைப்பிலிடுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து 10 லட்சத்து 85 ஆயிரம் ரூபா பணத்தினை மேற்படி சந்தேக நபரின் பெயரில் வங்கியில் வைப்பிலிட்டதாக தெரிவித்துக் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பாக பொலிஸாரிடம் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் பொலிஸாரின் விசேட நடவடிக்கை மூலம் கொழும்பு தெமட்டகொடை பகுதியில் வைத்து இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில்,எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri