பிரித்தானியாவில் குறைந்த வாடகையில் தங்கும் அறை கிடைக்கும் நகரங்கள்
பிரித்தானியாவில் (UK) மலிவான வாடகையில் தங்கும் அறைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய முதல் 12 நகரங்களின் பட்டியில் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டின் முடிவில் பிரித்தானியாவின் வாடகை சந்தை சற்று நிலையாக உள்ளதாக SpareRoom நிறுவனம் வெளியிட்டுள்ள Q4 வாடகை குறியீடு காட்டுகிறது.
கடந்த சில வருடங்களில் தங்குமிடங்களுக்கான வாடகை அதிகரித்துக்கொண்டே இருந்த நிலையில், தற்போதைய நிலைப்பாடு வாடகையாளர்களுக்கு நிம்மதி அளிக்கிறது.
அறை வாடகை
2024ஆம் ஆண்டில் அறை வாடகை சராசரியாக 738 யூரோ இலிருந்து 774 யூரோவாக உயர்ந்துள்ளது. அதாவது அதிகபட்சம் 1சதவீதம் மாத்திரமே உயர்ந்துள்ளது. இந்த உயர்வு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைவானதாகும்.

இந்நிலையில், பிரித்தானியாவின் மிகவும் குறைந்த வாடகை - நகரமாக Bootle (447 யூரோ) விளங்குகிறது. அதனைத் தொடர்ந்து Barnsley (465 யூரோ) மற்றும் Bradford (473யூரோ) நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, மிக விலையுயர்ந்த வாடகை கொண்ட நகரமாக Twickenham (928 யூரோ) உள்ளது. அதனைத் தொடர்ந்து Kingston-upon-Thames (920 யூரோ) மற்றும் Epsom (855 யூரோ) நகரங்களும் அதிக வாடகையுடன் உள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri