தொலைபேசி உரையாடல்களால் சிக்கிய திருடர்கள்! அதிரடியாக களமிறங்கிய பொலிஸார்
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைபாட்டுக்கு அமைய விரைந்து செயற்பட்ட பொலிஸார் சில மணிநேரத்தில் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான திருட்டுப் பொருட்களை மீட்டதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள வெளிநாட்டில் வசிப்பவரின் வீடொன்றில் இருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் வீடு உடைத்து திருடப்பட்டிருப்பதாக நேற்றையதினம்(15.06.2023) வீட்டு பராமரிப்பாளரால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட பொலிஸார்

குறித்த முறைப்பாட்டை தொடர்ந்து விரைந்து செயற்பட்ட சாவகச்சேரி பொலிஸார் சில மணிநேரங்களில் தொலைபேசி உரையாடல்கள் சிலவற்றை அடிப்படையாகக் கொண்டு நாவற்குழி பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 இலட்சம் ரூபாய் பெறுமதி வாய்ந்த திருட்டு பொருட்களை மீட்டதுடன் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து கைதான சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri