சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் பதற்றம்: மக்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய பொலிஸார்
புதிய இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த பொலிஸார் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யவில்லை.

இரண்டாம் இணைப்பு
தற்போது, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பொலிஸார் கைது செய்வதற்கு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் கூடியுள்ளனர்.
இந்நிலையில், வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனா வைத்தியசாலையை விட்டு வெயியேற முயற்சிப்பதையடுத்து மக்கள் அவரை வழிமறிக்கின்றனர்.
முதலாம் இணைப்பு
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை பலாத்காரமாக கைது செய்வதற்கு பொலிஸார் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் சென்றிருப்பதாக குறிப்பிடப்படுகின்றது.

பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிப்பு
அத்துடன், வைத்தியசாலையின் பிரதான மின் கட்டமைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வைத்தியசாலையில் இருந்த ஊடகவியலாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டுள்ளதுடன் எந்நேரமும் பதற்றநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan