தமிழரின் விகிதாசாரத்தை குறைக்க அரச நிறுவனங்கள் முயற்சி: சாள்ஸ் எம்.பி பகிரங்கம்(Video)
வடக்கு, கிழக்கில் எமது மக்களின் விகிதாசாரத்தை குறைக்கும் வகையில் தென்பகுதி சிங்களவர்களை குடியேற்றும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று(10.08.2023) உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
''காலம் காலமாக எமது மக்கள் வாழ்ந்த நிலங்கள் அரச நிறுவனங்களால் கையகப்படுத்தப்படுகிறன.
குறிப்பாக முல்லைதீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள நிலங்களை தென்பகுதி சிங்கள மக்களுக்கு நீண்டகால குத்தகைக்கு வழங்கும் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளேன்.
மேலும், 13 ஆம் திருத்தச்சட்டத்தின் மூலமாக தமிழருக்கு அரசாங்கத்தினால் ஒருபோதும் தீர்வை பெற்றுத்தர முடியாது." என தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 13 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

அண்ணா சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு மிர்ச்சி செந்தில் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
