ஏப்ரல் 21 தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையை கோரும் போது இனப்படுகொலைக்கு ஏன் கோரவில்லை..! சார்ள்ஸ் காட்டம்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வெளியான காணொளிக்கு சர்வதேச விசாரணை கோரப்படும் போதும் இதே சனல் 4வினால் இசைப்பிரியா உள்ளிட்டோர் தொடர்பில் வெளியிடப்பட்ட காணொளி குறித்து ஏன் சர்வதேச விசாரணை கோரப்படவில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (07.09.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை வினவியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் 21 தாக்குதல் விடயத்திற்கு சர்வதேச விசாரணை கோரிக்கையை வரவேற்கிறோம்.
சனல் 4 காணொளி விவகாரம்: தீவிரவாதிகளுடன் இணைந்து புலம்பெயர் தமிழர்கள் உதவியதாக பிள்ளையான் குற்றச்சாட்டு
அதனை தொடர்ந்து சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கூட்டமைப்பு கடிதம் அனுப்பியதும் வரவேற்கத்தக்கது.
சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் எல்லோரும் அறிந்த விடயத்தை சர்வதேச ஊடகம் உறுதிப்படுத்தியதை வரவேற்கிறோம்.
ஏப்ரல் 21 தாக்குதலுக்கு ஒரு சர்வதேச விசாரணையை முன்வைக்கும் போது எங்களுக்கு நடந்த இனப்படுகொலைக்கு ஏன் இன்று வரை ஒரு சர்வதேச விசாரணையை மேற்கொள்ள முன் வரவில்லை என கேள்வியெழுப்பியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam