சார்ள்ஸ் எம்.பி ஆதாரமற்ற குற்றாச்சாட்டினை முன்வைக்கின்றார்! நகரசபை தவிசாளர்
வவுனியாக்குளம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என்று வவுனியா நகரசபை தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா சுற்றுலாமைய விடயம் தொடர்பாக வனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் எந்தவித ஆதாரமுமற்றது.
சுற்றுலாமைய விவகாரத்தில் நகரசபை தவறிழைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். நகரசபை எந்த தவறும் இழைக்கவில்லை. சுற்றுலாமையம் தொடர்பான அனைத்து சட்டரீதியான ஆவணங்களும் எம்மிடம் இருக்கின்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அந்த விடயம் தொடர்பாக முறையாக ஆராயாமல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். அது அடிப்படையற்ற குற்றச்சாட்டு.
அவரது குற்றச்சாட்டுக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என அவரிடம் கேட்கின்றேன்.
அத்துடன் சுற்றுலாமைய விடயம் தொடர்பான வழக்கு நீதிமன்றில் இருக்கும் போது அது
தொடர்பாக அவர் கருத்து தெரிவித்தமை நீதிமன்றத்தையும் அவமதிக்கும் செயல் என அவர்
தெரிவித்திருந்தார்.





மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri
