பிரித்தானியாவின் புதிய மன்னராக சார்லஸ் அறிவிப்பு
பிரித்தானிய மகா ராணி இரண்டாம் எலிசபெத் உயிரிழந்துள்ள நிலையில், ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ் பிரித்தானியாவின் புதிய மனடனராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி, ராணியின் மூத்த மகனும் வாரிசுமான சார்லஸ், முன்னாள் வேல்ஸ் இளவரசர், ஐக்கிய இராச்சியம் மற்றும் 14 காமன்வெல்த் நாடுகளின் மன்னராக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் நாட்களில் என்ன நடக்கும் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனினும், ராணிக்கு முழு அரச மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கும் வகையில் ராணியின் உடல் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்வரும் நாட்களில் இறுதி திட்டங்களுக்கு மன்னர் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan
