கட்சிக்குள்ளே மஹிந்தவுக்கு எதிரான மற்றும் ஒரு குரல்! பதவி விலகுமாறு வலியுறுத்தல்!
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சரித ஹேரத்தும் ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இடைக்கால அரசாங்கத்தை அமைக்க மஹிந்த ராஜபக்ச வழிவிடவேண்டும் என்று கோரியிருந்த முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெருமவின் கருத்துக்களை தான் ஆமோதிப்பதாக ஹேரத் ட்வீட் செய்துள்ளார்.

அனைத்து தரப்பினருடனும் ஒத்துழைத்து விரைவில் தேசிய அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். எனவே மஹிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று தாம் கருதுவதாக ஹேரத் கூறியுள்ளார்.
இதன்படி 6-8 மாதங்களுக்கு ஒரு தேசிய, காபந்து வடிவிலான சிறிய அரசாங்கத்தை நியமிக்கவும் அவர் முன்மொழிந்துள்ளார்.
8 மாதங்களுக்குப் பிறகு தேர்தலை நடத்த வேண்டும் என்றும், அதற்குள் பொருளாதார நெருக்கடிகள் ஓரளவுக்கு சமாளிக்கப்படும் என்றும் அவர் எதிர்வை வெளியிட்டுள்ளார்.
இன்று முதல்... இங்கிலாந்தில் வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கு ஆறுதலளிக்கும் ஒரு செய்தி News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri