கிழக்கு இலண்டனின் பிரம்மாண்டம்! ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய தேர்த்திருவிழா!!
கிழக்கு இலண்டன் வோல்த்தம்ஸ்ரோ கற்பக விநாயகரின் தேர்த்திருவிழாவானது கொரோனாத் தொற்றின் பின்பு பல்லாயிரக்கான மக்களோடு மிகப்பிரம்மாண்டமாக எதிர்வரும் செப்டம்பர் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
கோயிலின் 5 வீதிகள் ஊடாகவும் பறவைக் காவடிகள், பொம்மலாட்டங்கள் , மயிலாட்டம் இவற்றுடன் 'ராகாஸ்' இசைக்குழுவின் இன்னிசைக் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.
அன்றைய தினம் கோவிலைச் சுற்றி இலவச வாகனத் தரிப்பிடங்களையும் ஏற்பாடு செய்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றார்கள்.
அத்தோடு, அடியவர்களின் தாக சாந்திக்காக தண்ணீர் , மோர்ப்பந்தல்கள்
மற்றும் மதிய வேளை அன்னதானமும் இடம் பெறவுள்ளதுடன், பல வியாபார நிறுவனங்களின் மலிவு விற்பனையும் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கின்றார்கள் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சிவாச்சாரியர்கள்.

ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri