சிறை அத்தியட்சகருக்கு குற்றப்பத்திரிகை கையளிப்பு
போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து கைதியொருவரைச் சிறையிலிருந்து சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக, அனுராதபுர சிறைச்சாலையின் முன்னாள் அத்தியட்சகர் மொகான் கருணாரத்னவுக்கு குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருட வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ், தகுதிபெறாத கைதியொருவரை விடுவித்த விவகாரம் தொடர்பில் சட்டமா அதிபர் குறித்த குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளார்.
குற்றச்சாட்டு
வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க முன்னிலையில், அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் முன்னாள் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு ஐந்து தனித்தனி குற்றப்பத்திரிகைகள் வாசிக்கப்பட்டன.

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 28 வழக்குகளில் பிரதிவாதியாக இருந்த ஒருவருக்கு, ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாகக் குறிப்பிடும் வகையில் போலியான ஆவணங்களைத் தயாரித்து, அந்தப் போலியான ஆவணங்களை அனுராதபுர உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, சம்பந்தப்பட்ட பிரதிவாதியைச் சிறையிலிருந்து சட்டவிரோதமாக விடுவித்தார் என்பதே அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
முதலமைச்சர் விஜய் முதல் மமிதா பைஜூ வரை.. ஜனநாயகன் திரைப்படத்தில் நடிக்க பிரபலங்கள் வாங்கிய சம்பளம் Cineulagam
வளைகுடா பகுதியில் ஈரான் தீவிர தாக்குதல்- உயர் எச்சரிக்கையில் அமெரிக்கா, குவைத், பஹ்ரைன் News Lankasri