பிரபல அரசியல்வாதி உட்பட மூன்று பேருக்கு எதிராக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட இரு பிரதிவாதிகளுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகற்றும் பணியை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்ததால் அரசாங்கத்திற்கு 2.6 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டமை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது சந்தேக நபர்களுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பிணையில் விடுதலை
குறித்த வழக்கில் முன்னாள் கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் மீன்பிடி துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam
