ஷெஹான் மாலக்க கமகே வழங்கிய கருத்து தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகே வழங்கிய கருத்து தொடர்பில் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சரீரப் பிணை
இந்த நிலையில் ஷெஹான் மாலகவை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி அமல் ரணராஜா முன்னிலையில் நேற்று (28.09.2022) முன்னிலைப்படுத்திய போது, அவரை தலா 500,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணைகளிலும் 50,000 ரூபா ரொக்கப் பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் மீது அதிருப்தி உணர்வுகளை தூண்ட முயற்சித்ததற்காக குற்றவியல் சட்டக் குற்றங்களின் கீழ் அவர் மீது சட்டமா அதிபர் குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளார்.
வழக்கு விசாரணைகள்
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் திகதி மருதானையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது பிரதிவாதி குற்றத்தில் ஈடுபட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 13ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
