சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய காணொளி: எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
இலங்கைக்கு எதிராக ஒலிபரப்பப்பட்டுள்ள சனல் 4 காணொளி தொடர்பில் பிரிட்டன் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சனல் 4 காணொளி தொடர்பாக அரசாங்க புலனாய்வு பிரிவு பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே முன்வைத்துள்ள முறைப்பாட்டிற்கிணங்க, பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இலங்கையில் பல இடங்களிலும் இடம்பெற்ற பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில், சனல்-04 அலைவரிசை அண்மையில் காணொளியொன்றை வெளியிட்டு, அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேக்கு எதிராக அதில் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டன.
சனல் 4 காணொளி
தம்மால் இதற்கு முன்னர் மேற்படி குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சிகளுடன் பதில் வழங்கப்பட்டுள்ள நிலையில், சனல்-04 அலைவரிசை மீண்டும் தன்னிச்சையாக தம்மை அசௌகரியத்துக்குட்படுத்தும் நோக்கில் இந்தக் காணொளியை வெ ளியிட்டுள்ளதாக சுரேஷ் சலே மேற்படி ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகத்திற்கு அறிவித்துள்ளார்.
அதற்கிணங்கவே, மேற்படி காணொளி தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரிட்டனின் இலத்திரனியல் ஊடக ஒழுங்குபடுத்தல் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த காணொளியை வெளியிடுவதற்கு முன்பதாக சனல்-04 அலைவரிசை கடந்த ஆகஸ்ட் மாதம் 07 ஆம் திகதி சுரேஷ் சலேயிடம் இக்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை கேட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் முற்றாக நிராகரிப்பதாகவும் மேற்படி சம்பவம் நடந்த காலத்தில், தாம் இலங்கையில் தங்கியிருக்கவில்லையென்றும் சுரேஷ் சலே அதற்கு மறுதினமே குறித்த தொலைக்காட்சி அலைவரிசைக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 20 மணி நேரம் முன்

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
