அசாத்தை நெருங்கிய சர்வதேச புலனாய்வாளர்கள்! முக்கிய ஆதாரங்கள் நிசாந்தவிடம் (Video)
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அசாத் மௌலானா கூறிய விடயங்களை விட நிசாந்த டி சில்வா கூறிய விடயங்கள் காத்திரம் வாய்ந்தவை என அரசியல் ஆய்வாளர் நேரு குணரட்னம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து அண்மையில் வெளியான சனல் 4 காணொளியினுடைய உண்மை தன்மைகளை மையப்படுத்தி லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகிய சந்தர்ப்பத்தில் நிசாந்த டி சில்வாவை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன.
அதில் ஒரு திட்டமாக, நிசாந்த டி சில்வா ஒரு இராணுவ வீரரை கொலை செய்தார் எனவும் அதன் காரணமாகவே வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ளார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இதில் அவரை நாடுகடத்த வேண்டும் என்ற பின்புலமும் கோட்டாபய அரசினால் தோற்றுவிக்கப்பட்டது.'' என தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்புலத்தையும், சனல் 4 காணொளியில் உண்மைத்தன்மைகள் பற்றியும் விரிவாக ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு...