இலங்கையின் நீதி அமைப்பில் ஏற்படவுள்ள மாற்றம் : அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையின் குற்றவியல் நீதி அமைப்பில் தாமதங்களைக் குறைப்பதற்காகவும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காகவும் ஒரு சுயாதீனமான அரசு வழக்கறிஞர் அலுவலகத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த முயற்சி தொடர்பில் அரசாங்கத்தின் தற்போதைய தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை பொதுமக்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதையும் குற்றவியல் வழக்குகளை விரைவாகக் கையாள்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேவையான திருத்தங்கள்
இந்த நடவடிக்கைக்கு அவசியமான சட்ட கட்டமைப்பை ஆய்வு செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதி யசந்த கொடகொட தலைமையில் தொழில்நுட்ப நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களில் தேவையான திருத்தங்களையும் இந்தக் குழு பரிந்துரைக்க உள்ளது.
முன்னதாக, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர், இலங்கையில் ஒரு சுயாதீன வழக்கறிஞர் அதிகாரசபையை அவசரமாக நிறுவ வேண்டும் என வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
