2027ஆம் ஆண்டு முதல் லிட்ரோ திரவ எரிவாயு விநியோகத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
2027ஆம் ஆண்டுக்கான லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனத்திற்கு 420,000 மெற்றிக் தொன் திரவ பெற்றோலிய வாயுவை விநியோகிக்கும் சர்வதேச ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.
சர்வதேச போட்டி விலைமுறிக் கோரல் முறைமையின் கீழ் இதற்காக 04 விலைமனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளள்ன.
விலைமனுக்கள் மதிப்பீடு
இவ்வாறுபெறப்பட்ட விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர்மட்ட பெறுகைக் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக, குறைந்தபட்ச விலைமனுவைச் சமர்ப்பித்த M/s OQ Trading Limited நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படவுள்ளது.

2027 ஜனவரி 01ஆம் திகதி முதல் 12 மாத காலப் பகுதிக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என்றும், 420,000 மெற்றிக்தொன் திரவ எரிவாயு (குறைந்தபட்சம் 336,000 மெற்றிக்தொன் சான்றுப்படுத்தப்பட்ட அளவுடன்) விநியோகிக்கப்படும்.
சமையல் எரிவாயு விநியோகம்
சவூதி அரம்கோ ஒப்பந்த விலையுடன் ஒரு மெற்றிக் தொன்னுக்கு 133.93 டொலர்கள் என்ற மொத்த பெறுமதிக்கு இந்த விநியோக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நாட்டில் சமையல் எரிவாயு விநியோகத்தைச் சீராகவும் தடையின்றியும் முன்னெடுப்பதை உறுதிசெய்யும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.