நாட்டில் இன்று பதிவாகிய கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டில் இன்று மேலும் 241 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்றைய தினம் 1, 010 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதற்கமைய, இன்று(3) இதுவரை 1,251 புதிய கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நீண்ட நாட்களின் பின்னர் நாளொன்றின் குறைந்தளவான கோவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை இன்று பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நாட்டில் பதிவாகிய மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 264,046 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மொத்த கோவிட் தொற்றாளர்களில் 231,394 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,191 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
