அநுர ஆட்சியில் இலங்கையின் விமான துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்தாண்டில் இலங்கையின் விமானப் போக்குவரத்துத் துறை கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் 92 இலட்சத்திற்கு மேற்பட்ட பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்கள்.
இந்த எண்ணிக்கையை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 15 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியாகும். இவ்வாண்டின் முதல் 11 மாதங்களில் கையாளப்பட்ட விமானங்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் 14 சதவீதத்திற்கு மேலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு
துறைசார் அமைச்சரின் வழிகாட்டல், முகாமைத்துவத்தின் சிறப்பான நிர்வாகம், பணிக்குழாமின் அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வளர்ச்சி சாத்தியப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை, சுற்றுலாத்துறையில் பல இலக்குகளை எட்டிய வருடமாக 2025ஆம் ஆண்டைக் குறிப்பிட முடியுமென இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்தள்ளது.
இவ்வாண்டு ஆகக்கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தார்கள்.
அடுத்த ஆண்டு 30 இலட்சத்திற்கும் மேலான சுற்றுலா பயணிகளைக் கவர்ந்திழுத்து, அவர்கள் மூலம் 500 கோடி ரூபா வருமானத்தை ஈட்ட முடியுமென அதிகார சபையின் தலைவர் புத்திக ஹேவாவசம் நம்பிக்கை வெளியிட்டார்.