இலங்கை பொலிஸ் சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்
பொலிஸாருக்கு தனியான சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இன்று (10) நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்
இது தொடர்பான வரைவு ஏற்கனவே பதில் பொலிஸ் மா அதிபரினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
நிதியமைச்சுடன் கலந்தாலோசித்து 2026 ஆம் ஆண்டில் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான சம்பளக் கட்டமைப்பை முன்வைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக விஜேபால தெரிவித்துள்ளார்.
மேலும், பொலிஸ் சேவையில் உள்ள பாரியளவிலான பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் தற்போது செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
