பிரித்தானியாவில் வீடுகளின் விலைகளில் ஏற்பட்ட மாற்றம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
பிரித்தானியாவில் பெப்ரவரி மாதம் எதிர்பாரத விதமாக வீடுகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேஷன்வையிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி மாதத்தில் சராசரியாக பிரித்தானியாவில் வீட்டின் விலை 6.9 சதவீதம் உயர்ந்து 231,068 பவுண்டுகள் என்ற நிலையை எட்டியுள்ளதாக நேஷன்வையிட் அறிவித்துள்ளது.
இதன்படி, சராசரி மதிப்பு 231,068 பவுண்டுகளை எட்டியுள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் - 19 தொற்று பரவல் மற்றும் வரி விதிப்பு ஆகியவை இந்த விலை உயர்வில் தாக்கம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட 6.9 சதவீத உயர்வை கண்டுள்ளது. இது ஜனவரி மாதத்தில் 6.4 சதவீதமாக இருந்துள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“இந்த அதிகரிப்பு ஒரு ஆச்சரியம்” என நேஷன்வைட் நிறுவனத்தின் தலைமை பொருளாதார நிபுணர் ராப் ரொபர்ட் கார்ட்னர் தெரிவித்துள்ளார்.
“இந்த அதிகரிப்பு வியக்க வைக்கிறது. "தற்போது சந்தையில் உள்ள சொத்துகளின் பற்றாக்குறையால், முத்திரை வரி விடுமுறை முடிவடைவதற்கு முன்பே விலை வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.” என அவர் கூறியுள்ளார்
எவ்வாறாயினும், இந்த Stamp Duty விடுமுறை மார்ச் 31ஆம் திகதி முடிவடைய உள்ளது, எனினும் அது நீடிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
முத்திரை வரி விடுமுறை என்பது ஜூலை முதல் இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் உள்ள அனைத்து சொத்து விற்பனையிலும் முதல், 500,000 பவுண்டுகள் வரி நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த வார வரவு செலவு திட்டத்தில் முத்திரை கட்டணத்தில் ஏதேனும் மாற்றங்கள் தொடர்பில் அறிவிப்புகள் வரலாம் என பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.