கனடாவில் வங்கி வட்டி வீதங்களில் ஏற்படவுள்ள மாற்றம்
கனடாவில் வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் வட்டி வீதங்கள் குறைக்கப்படும் காலப்பகுதி குறித்த விபரங்களை கனேடிய மத்திய வங்கி அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உரிய அவதானிப்புக்களின் அடிப்படையில் சரியான நேரத்தில் வங்கி வட்டி வீதம் தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் ரிம் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை
மேலும், தற்பொழுது ஐந்து வீதமாக காணப்படும் வங்கி வட்டி வீதமானது பொருளாதார நிலைமை மற்றும் பணவீக்கம் என்பன தொடர்பிலான தீர்மானங்களின் அடிப்படையில் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வட்டி வீதம் குறைப்பு தொடர்பில் மத்திய வங்கியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து இல்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |