அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் துரிதகதியில் மாற்றம்
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் புதிய கருவிகள் உள்ளிட் பல்வேறு மாற்றங்கள் குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போதைப் பொருள் வழக்குகளில் சந்தேக நபர்களாக கைதுசெய்யப்படுவோர் தங்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்கள் தொடர்பான இரசாயன அறிக்கை கிடைக்கும் வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் இருக்கும் நிலை காணப்படுகின்றது.
அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் ஆளணிப் பற்றாக்குறை, நவீன கருவிகள் இன்மை காரணமாக அவ்வாறான பகுப்பாய்வு அறிக்கைகளை வழங்குவதற்கு ஆறுமாதங்களுக்கும் மேலான காலம் எடுத்திருந்தது.
ஆளணிப் பற்றாக்குறை
எனினும் அண்மைக்காலத்தில் மிகக்குறுகிய காலப்பகுதிக்குள் சுமார் 17 ஆயிரத்து 500 பகுப்பாய்வு அறிக்கைகளை அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களம் வழங்கியிருந்தது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களின் அடிப்படையில் குறித்த அறிக்கையை துரித கதியில் வழங்க முடிவதுடன், அதன் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்குள் மட்டும் சுமார் ஐயாயிரம் சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் திணைக்களத்தின் ஆளணிப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் அதற்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளும் மிக விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளது.