ஜேர்மன் தேர்தல் முடிவால் ஏற்படவுள்ள மாற்றம்
ஜேர்மனிய அரசியலில் கூட்டு ஒரு புதிதான விடயமல்ல என சுவிஸர்லாந்தில் இருக்கக்கூடிய அரசியல் ஆய்வாளர் சுதாகரன்( Sudhakaran)தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் ஜேர்மனில் இடம்பெற்ற தேர்தல் நிலைமை குறித்து வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜேர்மன் தேர்தலில் எந்த ஒரு கட்சியும் அறுதி பெரும்பான்மையைப் பெறவில்லை. அவ்வாறு அறுதி பெரும்பான்மை பெறவில்லை என்பது ஒரு புதிதான விடயமில்லை.
ஜேர்மனிய அரசியலில் எப்பொழுதும் ஒரு கூட்டு ஆட்சியே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. 1949 இல் இருந்து பல விதமான பல நிறங்களுடன் கூடிய கூட்டு ஆட்சி இருந்து வருகிறது. இந்த நிறங்களுக்கு சில சில பெயர்களை வைத்துள்ளார்கள்.
அந்த நிறங்களின் அடிப்படையில் ஒவ்வொரு கூட்டுக்களுக்கான பெயர்கள் இருக்கின்றன. ஆகவே இந்த ஜேர்மனிய அரசியலில் கூட்டு ஒரு புதிதான விடயமல்ல எனத் தெரிவித்துள்ளார்.