தேசத்தை கட்டியெழுப்பும் வரியின் பெயர் மாற்றம்: விஜித ஹேரத் கருத்து
தேசத்தை கட்டியெழுப்பும் வரியை, வேறு பெயரில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி என்று அரசாங்கம் அறிமுகப்படுத்துவதாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (08) உரையாற்றும் போது இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரி (VAT) 8% ஆக இருந்த போது இந்த வரி, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால், தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறிமுகப்படுத்தப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இடைக்கால வரவு செலவுத் திட்டம்
இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பெறுமதி சேர் வரி 15% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்த வரியை இப்போது அறிமுகப்படுத்துவது அவசியம் இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த புதிய 2.5% வரி விதிக்கப்பட்டவுடன், மொத்த வரித் தொகை 20 முதல் 21% வரை அதிகரிக்கும், இது வரிக் கொள்கைக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு இறைவரி
தேசத்தை கட்டியெழுப்பும் வரி அறவீட்டுக்காக, சிங்கப்பூர் நிறுவனமொன்றின் உதவியுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால், 5 பில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அறிமுகப்படுத்தப்படும் புதிய வரிக்கு, அந்த மென்பொருள் பொருந்தாது என்பதால்,
இந்த புதிய வரிக்கான மென்பொருளை உருவாக்க மேலும் 2 பில்லியன் ரூபாவை
பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதன் வக்ர நிவர்த்தியால் நிதி நிலையில் அசுர வளர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு தான்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் விஜய்யின் ஜனநாயகன் குறித்த வந்த சூப்பர் அப்டேட்... என்ன தெரியுமா? Cineulagam