இலங்கையில் கோவிட் மரணங்களை அறிக்கையிடும் முறையில் மாற்றம்!
இன்று முதல் கோவிட் மரணங்களை அறிவிக்கும் போதும் கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற அனைத்து மரணங்களையும் அன்றைய தினத்திலேயே அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, இதற்கு முன்னர் அறிக்கை இடப்பட்ட கடந்த தினங்களின் கோவிட் மரணங்களின் எண்ணிக்கை புதிய பொறிமுறையின் கீழ் அறிக்கை இடப்படாது என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இதற்கு முன்னர் எம்மால் கடந்த தினங்களில் ஏற்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை அறிக்கை இடப்பட்டது. எனினும் நாம் இன்று முதல் கடந்த 48 மணித்தியாலங்களில் பதிவான கோவிட் மரணங்கள் அனைத்தையும் அன்றைய தினத்திலேயே வௌியிட தீர்மானித்துள்ளோம்.
அதன்படி, நாள் ஒன்றில் ஏற்படும் அனைத்து கோவிட் மரணங்களையும் அன்றைய தினமே வௌியிட புதிய பொறிமுறை ஒன்றை தயாரித்துள்ளோம்.
இதற்கமைய கடந்த 48 மற்றும் 24 மணித்தியாலங்களினுள் இடம்பெறும் கோவிட் மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan
