கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்
இலங்கையின் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலருக்கு செலுத்தப்படும் ரூபாயின் பெறுமதி நேற்றைய தினம் பாரிய அளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களுக்கமைய அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 316.79 ரூபாவாகவும் விற்பனை விலை 327.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
சந்தை ஆதாரங்களுக்கமைய, கறுப்பு சந்தை அந்நிய செலாவணி வர்த்தகர்களின் மாற்று விகிதம் ஒரு டொலருக்கு 350-360 ரூபாய்க்கு இடையில் காணப்பட்டுள்ளது.
கறுப்பு சந்தையில் கடந்த சில நாட்களாக டொலர் ஒன்றுக்கு 400 - 420 ரூபாய் வரையில் வழங்கப்பட்ட நிலையில் நேற்று 350 - 360 ரூபாய் வரை குறைவடைந்துள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக அரசாங்கம் நடைமுறைப்படுத்திய பொருளாதாரக் கொள்கைகளாலும், பணம் அனுப்பும் தொகை அதிகரித்ததாலும் கறுப்பு சந்தையில் அமெரிக்க டொலரின் மதிப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை செல்ல தீர்மானித்துள்ளமையினால் ரூபாய் வலுவடைய ஆரம்பித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan
