சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் பதவியில் மாற்றம்
சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் பதவியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக இதுவரையில் டொக்டர் ஹேமந்த ஹேரத் கடமையாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட் நோய்த் தொற்று ஏற்பட்ட காலத்தில் ஹேமந்த ஹேரத் பதவியில் நீடித்து வந்தார்.
சுகாதார அமைச்சின் தனிமைப்படுத்தல் விவகாரப் பணிப்பாளராக கடமையாற்றி வந்த டொக்டர் எஸ்.எம்.ஆர்னோல்ட் சுகாதார சேவைப் பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமது பொறுப்புக்களை அதிகாரபூர்வமாக டொக்டர் ஆர்னோல்டிடம் தாம் ஒப்படைத்ததாக டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
டொக்டர் ஹேமந்த ஹேரத் சுகாதார அமைச்சின் காச நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan
நாளை நான் இருப்பேனா...? மறைவுக்கு சில நாட்களுக்கு முன் நானா படேகர் பேசிய வார்த்தைகள் வைரல்! Manithan