கொழும்பு நகரில் ஏற்படவுள்ள மாற்றம்
கொழும்பில் பல முக்கிய இடங்களை அபிவிருத்தி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
புதிய வர்த்தக பொருளாதார பார்வையின் கீழ் கொழும்பில் பல முக்கிய இடங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
நாட்டிற்கு வரும் பயணிகளின் தகவல் வழங்கும் அலுவலகம், மிதக்கும் வர்த்தக நிலையங்களை திறப்பது மற்றும் வர்த்தக ஊக்குவிப்பு திட்டங்களுக்கு தொடர்புடைய பொருளாதார மையங்களை 6 மாதங்கள் வரை செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதற்கமைய கொழும்பில் மிதக்கும் வர்த்தக நிலையம், வைத்தியசாலை, கோல் சென்டர் மற்றும் ரேஸ் கோர்ஸ் உட்பட மேலும் பல இடங்களை இவ்வாறு அபிவிவிருத்தி செய்வதற்கு கொழும்பு வர்த்தக சங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri