பாடசாலை நேர மாற்றம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், அடுத்த ஆண்டு ஜனவரி முதல், பாடசாலை நேரம் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான அறிவிப்பை நேற்றையதினம் (06.11.2025) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து வெளியிட்டுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் படி, 5ஆம் ஆண்டு முதல் உயர்தரம் வரை பாடசாலை நேரம் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நீட்டிக்கப்படும்.
இடைவேளை
மேலும், ஒரு பாடவேளை 50 நிமிடங்கள் கொண்டதாக 7 பாடவேலைகள் நடத்தப்படும்.
அத்துடன், முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் 11.45 மணி வரையிலும், மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை 7.30 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும் நடைபெறும் பாடசாலை நேரங்களில் எந்த மாற்றமும் இருக்காது.
மேலும், இரண்டு இடைவேளைகள் வழங்குவதா அல்லது ஒரு இடைவேளை வழங்குவதா என்பதை முடிவு செய்ய பாடசாலை அதிகாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 5 மணி நேரம் முன்
தாஜ்மகாலுக்கு சுற்றுலா வந்த அமெரிக்க பெண்ணுக்கு பிறந்த கருப்பு நிற குழந்தைகள்! உண்மை என்ன? News Lankasri
ஈஸ்வரியை அசிங்கமாக பேசிய அன்புக்கரசி, கழுத்தை பிடித்த தர்ஷினி.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam