நாட்டு மக்களுக்கு மற்றுமொரு பேரிடி! உள்ளூர் உற்பத்தி பால்மாவின் விலையிலும் மாற்றம்
உள்ளூர் உற்பத்தி பால் மாவின் விலையை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைகள் மற்றும் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய,உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் 400 கிராம் பால் மா பக்கற்றின் விலையை 20 ரூபாவால் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டில் டொலருக்கான தட்டுப்பாடு நிலவும் வரை பால் மாவுக்கான தட்டுப்பாடு தொடரும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, ஒரு கிலோகிராம் பால் மாவின் புதிய விலை 1345 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன்,400 கிராம் பால்மாவின் விலையை 60 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் பால்மாவிற்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில்,தற்போது விலை எண்ணிப்பார்க்கதாக அளவிற்கு உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
