ஜனவரி முதலாம் திகதி முதல் வருமான வரியில் ஏற்படவுள்ள மாற்றம்
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் மற்றும் சமூக நல கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமானம் போதுமானதாக இல்லை என நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின தகவல்
ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய வரிக் கொள்கைகள் தொடர்பில் நிதியமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஜனவரி 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளார்.
சகல சீர்திருத்தங்களையும் முன்னெடுப்பதற்கு இதுவே சிறந்த சந்தர்ப்பம் என நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் நிதிக் கொள்கைப் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
வரி மாற்ற விபரங்கள்
சம்பள வகைகளுக்கு ஏற்ப தனிநபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்படும் என கூறியுள்ளார்.
இதன்படி,150,000 ரூபாய் சம்பளத்திற்கு 3500 ரூபாய் வரி அறவிடப்படும்.
200,000 ரூபாய் சம்பளத்திற்கு 10,500 ரூபாய் வரி அறவிடப்படும். 250,000 ரூபாய் சம்பளத்திற்கு 21,000 ரூபாய் வரி அறவிடப்படும்.
300,000 ரூபாய் சம்பளத்திற்கு 35,000 ரூபாய் வரி அறவிடப்படும். 350,000 ரூபாய் சம்பளத்திற்கு 52,500 ரூபாய் வரி அறவிடப்படும்.
400,000 ரூபாய் சம்பளத்திற்கு 70,500 ரூபாய் வரி அறவிடப்படும்.10 லட்சம் ரூபாய் சம்பளத்திற்கு 286,500 ரூபாய் வரி அறவிடப்படும்.
இதேவேளை நிறுத்தி வைக்கும் வரியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
மேலும் இலாபம் பெறும் அதாவது வட்டிக்கு பணம் வழங்கும் துறைகளுக்கு 15 சதவீத வருமானத்திற்கு 5 சதவீத வரி மற்றும் இலட்சத்திற்கு மேல் வாடகை செலுத்தினால் 10 சதவீத வரி அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





புடின் படை இந்த ஆண்டில் வெல்லும்... அதில் ஒளிந்திருக்கும் சிக்கல்: எச்சரிக்கும் குறி சொல்பவர் News Lankasri

வெற்றிக்கு பின்.., பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் ட்ரஸ்ஸிங் ரூம் கதவுகளை மூடிய இந்திய வீரர்கள் News Lankasri
