மத்திய வங்கியின் ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்படும் சாத்தியம் - ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி
மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அந்தப் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா என்பதில் நியாயமான சந்தேகம் இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கீர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன மத்திய வங்கி ஆளுநருக்கு எதிராக சுமத்தியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே தமக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஆளுநரை நியமிப்பதற்கு ஏற்பாடுகள்
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரை நீக்கிவிட்டு தினேஷ் வீரக்கொடியை மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதற்கு ஏதாவது ஏற்பாடுகள் உள்ளதா என அவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தின் புரிதல் இன்றி இலங்கை வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய வங்கிக்கோ அல்லது நிதி அமைச்சுக்கோ அதற்கான சட்ட அதிகாரம் இல்லை எனவும் அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பக்கீர் மார்க்கார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.