பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சசி வெல்கம தெரிவித்துள்ளார்.
பேருந்து கட்டணங்கள் தொடர்பில் இன்று (02) தீர்மானம் எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தது.
“ஏப்ரல் 30 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைக்கப்பட்டது.
எரிபொருள் விலையேற்றம்
எவ்வாறாயினும், கடந்த இரண்டு தடவைகள் எரிபொருள் விலையேற்றத்தின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படாததால், ஜூலை மாதம் மீண்டும் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்திருந்தன.
இதன்படி, எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணங்கள் திருத்தப்படக்கூடாது என போக்குவரத்து சங்கங்கள் தெரிவிக்கின்றன” என சசி வெல்கம கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri
