174 வருடங்களில் புவியின் வெப்பநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
கடந்த 174 வருடங்களில் பதிவாகாத அதிக்கூடிய வெப்பநிலை இந்த வருடத்தில் பதிவாகியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு (World Meteorological Organization) தெரிவித்துள்ளது.
அத்துடன் 65 ஆண்டுகளின் பின்னர் கடலின் வெப்பநிலையும் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு மேலும் குறிப்பிட்டுள்ளது.
2027ஆம் ஆண்டுக்குள், புவியின் சராசரி வெப்பநிலை 1.5 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக உயர்வடைவதற்கு 66% வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் வெப்பநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்
மேலும், வெப்பநிலை வேகமாக அதிகரிக்கும் பட்சத்தில் பனிப்பாறைகள் உருகுவதும் அதிகரிக்கும். அத்துடன் கடல் மட்டமும் வேகமாக உயரக்கூடிய அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் எதிர்வரும் மே மாதம் வரையில் அதிகமான வெப்பநிலை பதிவாகும் எனவும், எல் நினோ உச்சத்தை அடைய வாய்ப்புள்ளதாகவும் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அறிவித்துள்ளது.
இந்த வெப்பநிலை உயர்வு எதிர்வரும் காலங்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
