வைத்தியர் கேதீஸ்வரனின் போதை மாத்திரை விவகாரம்: சபையில் சிறீதரன் பகிரங்கம்
யாழ் மாவட்ட வைத்திய அத்தியட்சகர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மைகளை உடனடியாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா இராமநாதன் பகிரங்கப்படுத்திய விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
“சாவகச்சேரி விவகாரம் பூதாகரமாக வெடிப்பதற்கு யார் காரணம்? நீண்டகாலமாக அந்த மக்கள் எதிர்பார்க்கும் விடயம் பூர்த்திசெய்யப்படாமையே.
இதற்கு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர், மற்றும் யாழ். மாவட்ட சுகாதார பணிப்பாளர் ஆகியோர் இணைந்து தீர்வை கொண்டுவரவேண்டும்.
இவ்வளவு காலமாக செயற்படுத்தப்படாத அவசர சிகிச்சைப்பிரிவு உடனடியாக செயற்படுத்தப்படவேண்டும்.
அங்கு கூடியவர்கள் அர்ச்சுனா வைத்தியருக்காக மாத்திரம் கூடிய மக்கள் அல்ல. அவர்களின் நீண்டநாள் கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்கள் செயற்படுத்தமைக்கான விளைவாகும்.” என சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 12 மணி நேரம் முன்
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam