எங்களுடன் போராட மீண்டும் வாருங்கள்!மங்கள குறித்து சந்திரிக்கா உருக்கமான பதிவு (PHOTOS)
கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது முகப்புத்தகத்தில் ஒரு உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.
அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
சிறந்த இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான ஒவ்வொரு போராட்டத்திலும் நீங்கள் நிச்சயமாக உதவுனீர்கள்.
சுதந்திரம், நேர்மையான ஆட்சி - அனைவரையும் ஒருங்கிணைக்கும், பன்முகத்தன்மையை மதிக்கும் நாடு, அரசியல்வாதிகளுக்காக இல்லாமல் மக்களைப்பற்றி சிந்திக்கும் ஆட்சி முறை என சகலவற்றினதும் அடையாளம் நீங்கள் தான்.
அநீதி, ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நிற்கும் அனைவரின் இதயங்களிலும் செயல்களிலும் நீங்கள் வாழ்வீர்கள். மோட்சம் அடைவதற்கு முன், நாங்கள் கண்ட கனவு ஒரு முக்கியமான இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் எங்களுடன் சேர நீங்கள் மீண்டும் வாருங்கள்! என்றும் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan